கொரோனா பி.சி.ஆர்., பரிசோதனை கிடையாது..!
- 21 Jan 2021
- 88
- 02
கொரோனா பி.சி.ஆர்., பரிசோதனை கிடையாது..!
துபாய், ஜன.21-
துபாயில் உள்ள சில மருத்துவ மையங்களில் கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படாது என சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் பல்வேறு மையங்களில் கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்பவர்கள் அல் ரசிதியா மஜ்லிஸ், ஜுமைரா 1 துறைமுகம் மஜ்லிஸ் மற்றும் அல் நாசர் கிளப் ஆகிய இடங்களில் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்யாமல் பொதுமக்கள் தேரா சிட்டி சென்டர் மற்றும் மால் ஆப் தி எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
துபாய் மால், அல் நகீல் மால், மிர்திப் சிட்டி சென்டர், அல் ஹம்ரியா துறைமுகம் மஜ்லிஸ் மற்றும் அல் சபாப்& அல் அக்லி கிளப் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பரிசோதனை மையங்களில் இனிமேல் கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படாது.
பொதுமக்கள் கொரோனா பி.சி.ஆர். பரிசோதனை செய்யும் இடங்களை தெரிந்து கொண்டு அதனை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment