Logo

திருமண அழைப்பிதழ் வழங்கவே அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கிறேன்-கே.சி.பழனிசாமி

திருமண அழைப்பிதழ் வழங்கவே அரசியல் கட்சி
தலைவர்களை சந்திக்கிறேன்-கே.சி.பழனிசாமி

சென்னை, ஜன.18-
திருமண அழைப்பிதழ் வழங்கவே அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருவதாகவும், அதை தவிர்த்து வேறு எந்த அரசியல் நோக்கம் இல்லை என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரர் கே.சி.பழனிசாமி நேற்று  விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தவர் கே.சி.பழனிசாமி. கடந்த ஆண்டு அதிமுக கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை தனிப்பட்ட முறையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தியதாக கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகள், பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அதிமுக அறிவித்தது.  
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் கே.சி.பழனிசாமி திமுகவில் இணையலாம் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் பரவியது. 
இதுகுறித்து திரு.கே.சி. பழனிசாமி அவர்களை தொடர்புகொண்டு கேட்ட போது, திருமண அழைப்பிதழ் வழங்கவே அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருவதாகவும், அதை தவிர்த்து வேறு எந்த அரசியல் நோக்கம் இல்லை என்று அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரர் கே.சி.பழனிசாமி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். பின்னர் தனது முகநூல் பக்கத்திலும் வதந்திகளுக்கு முற்றிபுள்ளி வைக்க விளக்கமாக பதிவிட்டுள்ளார். 
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரர் கே.சி.பழனிசாமி கூறியதாவது, எனது இளைய மகன் திருமணம் வருகிற ஜனவரி மாதம் 26, 27ம் தேதி அன்று கோவையில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் திரு.எல்.முருகன், அ.ம.மு.க தலைவர் திரு.டி.டி.வி.தினகரன், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் திரு. கமல்ஹாசன்  ஆகிய அனைவருக்கும் அழைப்பிதழ்களை வழங்கி உள்ளேன்.  
பா.ம.க. கட்சித் தலைவர் திரு. இராமதாஸ் அவர்கள் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு அழைப்பிதழை  கொரியர்(courier) மூலம் ஏற்றுக் கொண்டார். 
முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு.ஓ.பன்னீர் செல்வம், திரு. சீமான், திரு. தொல். திருமால்வளவன் அவர்களுக்கு நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்க நேரம் கேட்டு உள்ளேன். மற்றபடி இதில் எந்த விதமான அரசியலும், அரசியல் உள் நோக்கமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார். 
அதிமுகவின் அதிருப்தி தொண்டர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்றும், தொண்டர்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலும் முன்னால் எம்பி கே.சி.பழனிசாமி தொடர்ந்து ஜூம் மீட்டிங் நடத்தி வருகிறார். சமூக வலைதளங்கள் மூலம் தொண்டர்களிடையே அரசியல் பயிலரங்கை நடத்தி வருவதில் வெற்றியும் கண்டுள்ளார் அஇஅதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி.
Zoom Meeting  மூலம் பொதுமக்கள், தொண்டர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வரும் கே.சி. பழனிசாமி, அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகளை, பட்டியலிடுகிறார். அத்துடன் அந்த பணிகளின் தொடர் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு, தன்னிடம் ஆலோசிக்கும் கட்சித் தொண்டர்களை வழி நடத்திவருகிறார். தொண்டர்களோடு நடத்தும் கூட்டங்களின் மூலம் பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில், தேர்தலில் வெற்றிக்கான வியூகங்களை கிளைக்கழக நிர்வாகிகள் வரை கொண்டு சேர்த்துள்ளார் கேசிபி.
எம்ஜிஆர் அரசியலை முன்னெடுத்தும், கோட்பாடு கொள்கைகளை கடைபிடித்தும், கேசிபி சப்போர்ட்டர்ஸ் வாட்ஸ்அப் குழு ஒன்று அமைத்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். தொண்டர்கள் மற்றும் வாக்காளப் பெருமக்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ய விரும்புகிறவர்கள் பதிவு செய்யும் சந்தேகங்களுக்கு -7530001234 என்ற எண்ணை தொடர்புகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். Whatsapp  தொலைபேசி எண்ணை பதிவிடவும் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது இளைய மகன் திருமணம் வருகிற January(ஜனவரி) மாதம் 26/27 கோவையில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை திமுக தலைவர்...

Posted by K C Palanisamy.AIADMK on Sunday, January 17, 2021

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement