Logo

மாவட்ட ஆட்சியர்களுடன் ஜன., 29ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் ஜன., 29ம் தேதி 
முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

 

சென்னை, ஜன.24-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவில் தற்போது தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஜனவரி 29ம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் அடுத்த மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு தளர்வுகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டமானது நடைபெற்று வருகின்றது.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் ஜனவரி 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தளர்வுகள் குறித்த அடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும், பிப்ரவரி மாத கட்டுப்பாடுகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதியுடன் முடிவடையவுள்ள சூழலில் முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் ஜனவரி 29ம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement