Logo

பாமக-அதிமுக கூட்டணி நீடிக்குமா? 31ம் தேதி முக்கிய முடிவு உட்பட செய்தி தொகுப்பு

பாமக-அதிமுக கூட்டணி நீடிக்குமா?

31ம் தேதி முக்கிய முடிவு

சென்னை, ஜன.24-

பா.. நிர்வாகக் குழுக் கூட்டம் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் .தி.மு.கவுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தி.மு., .தி.மு. ஆகிய கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்திவருகின்றன. தி.மு.கவைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலின்போது இணைந்து போட்டியிட்ட கட்சிகள் தற்போது ஒன்றாக செயல்பட்டுவருகின்றன.

ஆனால், .தி.மு.கவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட பா.., பா.. ஆகிய கட்சிகள் .தி.மு.கவுடன் இணக்கமாக இல்லை. முன்னதாக, வன்னியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, கல்வியில் 20 சதவீத இடஒதுக்கீடுகோரி பா.. சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பா.. இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அதனையடுத்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் அறிவிப்பை ராமதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், பா.. சார்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசிக்கவும், அந்த விவகாரம் தொடர்பாக அரசியல் நிலைப்பாடு எடுப்பதற்காக நாளை பா.. நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பா.. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பா.. நிர்வாகக் குழு கூட்டம் நாளை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு இணைய வழியில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சவால் விட்ட அமைச்சர் ஜெயகுமாருக்கு

பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி!

 

சென்னை, ஜன.24-

ராயபுரத்தில் என்னை எதிர்த்து மு..ஸ்டாலின் போட்டியிட தயாரா என சவால் விட்ட ஜெயக்குமாருக்கு திமுக பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் பெரிய தலைவர்களை எதிர்த்து போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மு..ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் மற்றும் குஷ்பு ஏற்கனவே கூறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து மு..ஸ்டாலின் போட்டியிட தயாரா என சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டிருந்தார். இந்த சவாலை தற்போது ஏற்றுக்கொண்டுள்ள ஆர்.எஸ்.பாரதி, ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாருக்கு எதிராக திமுக வலுவான ஒரு போட்டியாளரை நிறுத்தும் என்றும் இதனை அடுத்து அந்த தொகுதியில் ஜெயக்குமார் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்

ஜெயகுமார் மட்டுமின்றி தமிழக அமைச்சர்கள் அத்தனை பேருக்கும் எதிராகவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலுவான வேட்பாளரை நிறுத்தும் என்றும் இந்த முறை ஒரு அமைச்சரை கூட வெற்றி பெற விடமாட்டோம் என்றும் திமுக தரப்பினர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

திமுக கூட்டணிக்கு கமல் வரவேண்டும்-கார்த்தி சிதம்பரம்

திருப்பூர், ஜன.24-  

கமல் தனித்து நின்றால் சொற்ப வாக்குகளையே பெறுவார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் அவர் தி.மு.. கூட்டணிக்கு வர வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையம் அருகே ராகுல்காந்தி பேச உள்ள பொதுக்கூட்ட மேடையை பார்வையிட சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் வந்தார். அப்போது அவர் கூறியதாவது, 10 ஆண்டு கால .தி.மு.. ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படுத்தவில்லை. கொரோனா நிவாரணமும் பொதுமக்களுக்கு சென்றடையவில்லை.

ராகுல்காந்தி வருகையால் தமிழகத்தில் பொதுமக்களிடையே எழுச்சி நிலவுகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு காங்கிரசை குற்றம்சாட்டியவர்கள் பின்னர் காங்கிரஸ் மீது குற்றம் இல்லை என்று உணர்ந்து கொண்டனர். ராகுல்காந்தி அவனியாபுரத்திற்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை மக்களோடு மக்களாக இருந்து பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கலந்து உரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்தனர். பிரச்சினைகளுக்கு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தீர்வு காணப்படும்.

கமல் தனித்து நின்றால் சொற்ப வாக்குகளையே பெறுவார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் கமல் தி.மு.. கூட்டணிக்கு வர வேண்டும். கமல் தொடர்ந்து அரசியலில் இருக்க சாதுர்யமான முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் தென்னரசு, தாராபுரம் எம்.எல்.. காளிமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.

 

முதல்வர் வீட்டை  முற்றுகையிட்ட பெண்கள்..!

சேலம், ஜன.24-

தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணமான நபரை கண்டுபிடித்து தரக்கோரி திருச்சியை சேர்ந்த பெண் தனது உறவினர்களுடன் சேலத்தில் உள்ள முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஊரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவர் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கோமதி திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை விபத்தை ஏற்படுத்திய நபர் யார் என காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தனது கணவரின் உயிரிழப்புக்கு காரணமான நபரை உடனடியாக கண்டுபிடிக்க வலியுறுத்தியும், கணவரை இழந்து வருமானம் இன்றி தவிக்கும் தனது குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க கோரியும் கோமதி அவரது இரண்டு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் சேலத்தில் உள்ள முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முயன்றார்.

இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, முதல்வர் தற்போது வீட்டில் இல்லை எனவும், திங்கட்கிழமை தான் வருவார் அப்போது அவரை நேரில் சந்தித்து மனு அளித்து கொள்ளுமாறும் தற்போது கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர்.

இதையடுத்து கோமதி தனது உறவினர்களுடன் அங்கிருந்து திரும்பி சென்றார். திடீரென பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சமூக வலைதளங்களில்

அதிமுக பொய் பிரசாரம்--கனிமொழி

 

ராமநாதபுரம், ஜன.24-  

சமூக வலைதளங்களை பயன்படுத்தி .தி.மு.. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்களாக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். தனுஷ்கோடியில் பிரசாரத்தை தொடங்கினர். ராமேசுவரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் மண்டபம் அருகே வேதாளையில் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரட்டையூரணியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வாக்குச் சாவடி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கூட்டம் பட்டினம்காத்தானில் நடந்தது. இதில் சட்டமன்ற தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், வாக்காளர்களை எப்படி சந்திக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். தொடர்ந்து ராமநாதபுரம் நகரில் மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில், ரேசன் கடைகளில் மக்களுக்கு தரமான அரசி வழங்கப்படுவதில்லை. பெண்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை இருப்பதை காண முடிகிறது. சமூக வலைதளங்களை பயன்படுத்தி .தி.மு.. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியல்ல. தேவையான இடங்களில் சாலை வசதியில்லை. ஆனால், தேவையற்ற இடங்களில் எட்டுவழி சாலை அமைக்கப்படுகிறது. குடிமராமத்து பணியும் முழுமையாக நடைபெறவில்லை என்றார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement