Logo

அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் வேலை வாய்ப்பு

அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் வேலை வாய்ப்பு

வேலூர்:

     சமூக பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்கு ஆற்றுப்படுத்துதல் (Counselling) சேவை வழங்க 3 (மூன்று) ஆற்றுப்படுத்தநர்களை (ஒருவர் பெண் ஆஜர்படுத்துநர்) மதிப்பு ஊதிய அடிப்படையில் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித்தகுதி:  இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01-01-2021 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மதிப்பூதியம்: ஒரு நாளைக்கு ரூ.1000/- வீதம் 70 நாட்களுக்கு மட்டும் (இரு  தினங்களுக்கு ஒரு முறை வீதம்)

     மேற்குறிப்பிட்ட தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் தகவல்களை வேலூர் மாவட்ட இணையத்தில் (https://vellore.nic.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்

     விண்ணப்பங்களை உரிய சான்றுகளின் ஒளி நகலுடன் வரும் 05-02-2021 மாலை 05.45 மணிக்குள் (வெள்ளிக்கிழமை) கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

                05-02-2021 மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும். தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்கள் கொண்ட தேர்வுக் குழு மூலம் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்கள்

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி

கண்காணிப்பாளர்,

அரசினர் குழந்தைகள் காப்பகம்,

ராஜீவ் காந்தி நகர், செங்குட்டை,

காட்பாடி, வேலூர்-632007

தொலைபேசி எண்: 0416-2296775

கண்காணிப்பாளர்:+91 93616 22459

     இத்தகவலை வேலூர் மாவட்ட ஆட்சியர் .சண்முகசுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Click here ==>>  Application

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement