Logo

கள்ள லாட்டரி விற்பனை மீது தீவிர நடவடிக்கை ஆய்வாளர் கோபிநாத்க்கு பொதுமக்கள் பாராட்டு

 

கள்ள லாட்டரி விற்பனை  மீது தீவிர நடவடிக்கை
ஆய்வாளர் கோபிநாத்க்கு பொதுமக்கள் பாராட்டு

ஈரோடு, பிப்.10-
காவல் நிலைய ஆய்வாளர் கோபிநாத்தின் தீவிர கண்காணிப்பின் பேரில் கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் அப்பகுதியில் கள்ள லாட்டரி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு வருகிறது.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் தாய்மார்கள் மற்றும் தன்னார்வலர்கள் கருங்கல்பாளையம் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும்  காவலர்களையும் உளமாற பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். 
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ள லாட்டரிச் சீட்டுகள் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுவும் கேரள மாநில லாட்டரிகளை அடிப்படையாக கொண்டு தினசரி 5 முதல் பத்து குலுக்கல்கள் முறையில் கள்ள லாட்டரிகள் ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவுப்படி அனைத்து காவல் நிலையங்களிலும் கள்ள லாட்டரி களை ஒழிக்க தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.  இதில் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையம் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.  
காவல் நிலைய ஆய்வாளர் கோபிநாத்தின் தீவிர கண்காணிப்பின் பேரில் கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள் மேற்கொண்ட நடவடிக்கையின் பேரில் அப்பகுதியில் கள்ள லாட்டரி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு வருகிறது.  இதனால் அப்பகுதி பொதுமக்கள் தாய்மார்கள் மற்றும் தன்னார்வலர்கள் கருங்கல்பாளையம் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும்  காவலர்களையும் உளமாற பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். லாட்டரி வியாபாரிகள் தற்போது கருங்கல்பாளையம் பகுதியில் இருந்து வெளியேறி மற்ற பகுதிகளுக்கு சென்று தலைமறைவாகி வருகின்றனர். காவல் ஆய்வாளர் கோபிநாத் இதற்கு முன் பணியாற்றிய இடங்களிலும் சட்டவிரோத செயல்களை தடுத்து அவற்றை முற்றிலுமாக ஒழித்து காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல் ஆய்வாளராக பணியாற்றியபோது கள்ளத்தனமாக ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் மீது தீவிர நடவடிக்கை எடுத்து அவர்களை சிறைக்கு அனுப்பி தண்டனை பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஏழை கூலித் தொழிலாளர்களின் வருமானத்தில் பாதிக்கு மேல் கள்ளலாட்டரிகளை நம்பி இழந்து விடாமல் இருப்பது பல குடும்பங்களில் மனைவிமார்களின் நிம்மதியாக இருக்கிறது. பொதுமக்களுக்கும் அரசுக்கும் என்றும் நம்பிக்கைக்குரிய விசுவாசம் உள்ளவராக இன்றுவரை தனது கடமையை பேணிக்காத்து வரும் காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்களை அனைவரும் பாராட்டி வருவது தனிச்சிறப்பாகும்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement