சி.ஆர்.பி.எப் வீரருக்கு 5 ஆண்டுகள் தண்டனை
- 10 Feb 2021
- 38
- 02
விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம்
சி.ஆர்.பி.எப் வீரருக்கு 5 ஆண்டுகள் தண்டனை
அரூர், பிப். 10:
விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் சிஆர்பிஎப் வீரர் சக்திவேல் (36) என்பவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கி அரூர் சார்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கூத்தாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி மகன் சிவா. இவர், கடந்த 13.3.2016ல், தமது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தாராம். அப்போது, பக்கத்து விவசாய நிலத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சக்திவேல் மற்றும் விவசாயி சிவா ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டதாம்.
இந்த தகராறில் சிவா, அவரது தந்தை பொன்னுசாமி ஆகியோர் மீது சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் மீது, அரூர் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்த வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த அரூர் சார்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி, சி.ஆர்.பி.எப் வீரர் சக்திவேலுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இருந்து கூத்தாடிப்பட்டியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு, சுரேஷ், நல்லத்தான், சரவணன், மாது, தனலட்சுமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் சி.முத்துராஜா ஆஜரானார்.
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment