Logo

சேர்க்காடு சோதனைச் சாவடியில் அமர்ந்திருந்த செய்தியாளரிடம் லஞ்சம் கொடுத்த ஓட்டுநர்!

சேர்க்காடு சோதனைச் சாவடியில் அமர்ந்திருந்த
செய்தியாளரிடம் லஞ்சம் கொடுத்த ஓட்டுநர்!

அம்பலமான லஞ்சம் லாவண்யம்-விழிபிதுங்கிய அலுவலர்கள்

வேலூர், பிப்.11-

வேலூர் அடுத்த சேர்க்காடு சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்குவதாக குற்றம்சாட்டுகள் எழுந்தது. இதை குறித்து செய்தி சேரிக்க சென்ற தலைமை செய்தியாளரிடம், சோதனை சாவடி அலுவலர் என தவறுதலாக புரிந்துகொண்டு அங்கு அமர்ந்திருந்த செய்தியாளரிடம் லஞ்சம் கொடுத்து விட்டு சென்றார் லாரி ஓட்டுநர். இதைகண்ட சோதனை சாவடி அலுவலர்கள் செய்வதறியாமல் லஞ்சம் லாவண்யம் அம்பலமானதால் விழிபிதுங்கி நின்றனர். இதுபோன்று அக்கப்போர்கள் நடந்து வருகிறது என்பது பலருக்கும் தெரியாது.
வேலூரில் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் ஒரு வாகனச் சோதனைச் சாவடியும், சேர்க்காட்டில் ஒரு வாகனச் சோதனைச் சாவடியும் செயல்படுகின்றன. இந்நிலையில் சேர்க்காடு சோதனைச் சாவடியில் தினமும் நடக்கும் அக்கப்போர்களை சொல்லி மாளாது. அந்தளவுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் யார், செய்தியாளர்கள் யார் என்ற வித்தியாசம் தெரியாத நிலையில் இந்த அலுவலகம் செயல்படுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். 
இந்த சேர்க்காடு அலுவலகத்தில் லட்சுமி என்ற பெண் மோட்டார் வாகன ஆய்வாளர் பணியாற்றுகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் இந்த சேர்க்காடு சோதனைச் சாவடிக்கு பணிக்கு வந்தார். அவர் வந்ததில் இருந்தே லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாட ஆரம்பித்து விட்டது. லாரி டிரைவர்கள் கூட யார் அதிகாரிகள், பணியாளர்கள் என்று வித்தியாசம் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 
சேர்க்காடு சோதனைச் சாவடியில் அமர்ந்திருந்த செய்தியாளரிடம் ஒரு லாரி டிரைவர் வேகமாக வந்து ரூ.ஆயிரத்தை கொடுத்து விட்டு திரும்பவும் வேகமாக சென்று விட்டார். சோதனைச் சாவடியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற செய்தியை சேகரிக்க சென்ற செய்தியாளரிடமே ஓட்டுநர் தவறுதலாக லஞ்சம் வழங்கியது கும்பிட போன தெய்வம் குறுக்க வந்து வரம் தந்தது போலானது. இது நடந்தது பட்டப்பகலில் என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
லட்சுமி பணியில் இருந்தபோதுதான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதுகுறித்து என்ன விளக்கம் கேட்டுகொண்டிருந்த செய்தியாளரிடமே, லாரி ஓட்டினர் வேகமாக வந்து லஞ்சம் மாமுலாக வழங்கும் ரூ.1000&த்தை வழங்கிவிட்டு வேகமான செல்கிறார் என்றால் நாமே புரிந்து கொள்ளவேண்டும்... எழுதப்படாத சட்டமாக வாகனத்திற்கு ரூ.1000ம் வாங்குகிறார்கள் என்பது அம்பலமானது...
வாய்கிழிய யோகியமான பேசிய இந்த பெண்மணி என்ன செய்வதென்று தெரியமான விழிபிதுங்கி நின்றார். லஞ்சம் லாவன்யம் அம்பலமானது செய்தியாளரையே விலை பேச ஆரம்பித்துவிட்டார்....
இவரை பற்றி  ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் விசாரித்தால் பணத்தை வாரி குவித்துள்ளார் என்ற பதில்தான் கிடைக்கிறது. உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் பெயரில் சொத்துக்களை வாரி குவித்துள்ளார் பலே கில்லாடி பெண்மணி லட்சுமி. இவருக்கு லட்சுமி என்ற பெயர் வைத்த காரணத்தாலோ என்னவோ பணம் பணம் என்று அலைந்து திரிகிறார். 
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சேர்க்காடு சோதனைச் சாவடிக்கு பணிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாக பல லகரங்களை வாரி குவித்துள்ளார் இந்த லட்சுமி. லட்சுமி கடாட்சம் அதிகம் இவரிடம் காணப்படுகிறதாம். அதனால் பணத்தை தேடி தேடி அலைகிறார். இவரது வீடு மட்டுமல்லாது, இவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் ஒரு அதிரடி சோதனை நடத்தினால் பல கோடி மதிப்புள்ள நகை, பணம் சொத்துக்கள் அதாவது அசையும் சொத்துக்களும், அசையாத சொத்துக்களும் கையகப்படுத்தலாம் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்தவர்கள்.
 இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் லட்சுமி வாய் திறந்தாலே போதும் ஏதோ அரிச்சந்திரன் வீட்டு எதிரில் வசிப்பவர் பேசுவது போன்று பேசுவார். ஆனால் செய்யும் வேலைகள் அனைத்தும் நேர் எதிர் மாறாக இருக்கும். அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர்களிடம் அபராத தொகையை முறையாக வசூலிப்பது இல்லை. மாறாக இவர் அந்த லாரி ஓட்டுநர்களிடம் குழைந்து பேசி பல ஆயிரங்களை கறந்து கொண்டு அனுப்பி விடுகிறாராம். இது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகிறது. கேமராவில் பதிவாகும் பதிவுகளை ஆராய்ந்து பார்த்தால் உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். சத்தியம் தவறாத உத்தமர் போன்று பேசுவார். ஆனால் நடந்து கொள்வது மட்டும் நேர் எதிராக இருக்கும். இவரது உருட்டல் மிரட்டலுக்கு பயந்து பணத்தை வாரி இறைத்து விட்டு செல்கின்றனர் லாரி ஓட்டுநர்கள்.
இவர் பணியில் இருப்பதை பார்த்தாலே போதும் லாரி ஓட்டுநர்கள் முகம் சுருங்கி விடும் அந்தளவுக்கு இவரது நடவடிக்கை இருப்பது குறிப்பிடத்தக்கது. திருடர்களிடம் வழிப்பறி செய்வது போன்று உள்ளது லட்சுமியின் நடவடிக்கை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவரது முகத்திரை கிழியும். இல்லையெனில் பசுத்தோல் போர்த்திய புலி போன்று வலம்வந்து கொண்டிருப்பார். அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் இதுபோன்றோர் மீது துறைரீதியான நடிவடக்கை எடுக்கவேண்டும்...  
அச்சம் தவிர் என்கின்ற வார்த்தை தவறுதலாக புரிந்துகொண்டு அச்சமின்றி மாமூல் வாங்கின்றனர்... லஞ்சம் ஒழிப்புத்துறை இதுபோன்றோர் மீது எப்போதும் பார்வை பதிய வைத்திருக்கவேண்டும்...  அப்போதுதான் இவர்கள் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில்,  மாமூல் என்கின்ற பெயரில் லஞ்சம் வாங்க அச்சம் கொள்வார்கள்...

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement