Logo

சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் பேராபத்து விளையும்-சமூக ஆர்வலர்கள்!

 

 சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால்

பேராபத்து விளையும்-சமூக ஆர்வலர்கள்!

 

பூவிருந்தவல்லி, பிப்.10-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அருகாமையில் உள்ள சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் பேராபத்து விளைவிக்கக் கூடும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இங்கு கொட்டப்படும் குப்பைகளால் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகள் சண்டை போட்டுக் கொண்டு நடு வீதிக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் தினம் தினம் இந்த பகுதியில் அரங்கேறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இது மட்டும் இல்லாமல் சாலை ஓரத்தில் உள்ள ஜெ.,வின் கொடிக்கம்பம் அருகில் இவர்கள் குப்பைகளை கொட்டுவதால் இன்று கட்சியின் தொண்டர்கள் மிகவும் வருத்தப் படுகிறார்கள். இந்த இடத்தில் குப்பைகள் அதிகரித்து வருவதால், குப்பை நான் அம்மாவின் உருவப்படம் முழுவதையும் மறைக்கும்படி உள்ளது. இதனை கண்டுகொள்ளாத கட்சியின் தலைமைப் பொறுப்பாளர்கள் ஆவடி மாநகராட்சி உள்ள குப்பைகளை அகற்றுவது என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்னதான் நல்ல திட்டங்களை எடுத்து வந்தாலும் அதனை பராமரிப்பு செய்து வருவது ஆவடி மாநகராட்சியின் கடமையாகும். இவர்கள் அந்தக் கடமையிலிருந்து தவறுவதால் அமைச்சரக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். இனியாவது மாநகராட்சி ஊழியர்கள் அமைச்சருக்கு ஆதரவாக செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகும்

மண்புழு உரம் தயாரிப்பு கூடம்!

 

நெய்வேலி, பிப்.10-

வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் கட்டப்பட்ட மண்புழு உரம் தயாரிப்பு கூடம் பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை ஊராட்சியில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையில் இருந்து மண் புழு தயாரிக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017&2018 கீழ், ரூ.1 லட்சம் மதிப்பில் மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகை வெங்கடாம்பேட்டை சந்தை தோப்பு அருகில் அமைக்கப்பட்டது. இந்த கூடம் கட்டப்பட்டு கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் கடந்தும் இதுநாள் வரையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் மக்கி வீணாகி வருகிறது. கொட்டகையை சுற்றி புதர் மண்டி கிடப்பதால், கழி மற்றும் தென்னை கீற்றுகள் மக்கி விஷப் பூச்சிகளின் உறைவிடமாக மாறியுள்ளது. உரக்கிடங்கினுள் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில்  கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. மக்கள் வரிப்பணம் ரூ.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மண்புழு தயாரிப்பு கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


பண்ருட்டி பகுதியில் அகற்றப்படாத

குப்பையால் சுகாதாரச் சீர்கேடு!

 

பண்ருட்டி, பிப்.10-

பண்ருட்டி பகுதியில் அகற்றப்படாத குப்பையால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 பண்ருட்டியில், கும்பகோணம் சாலையில் உள்ள பெரியார் டெப்போ அருகில் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதேபோல் வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் விவசாய பொருட்களை காயவைப்பது போல் குப்பைகளை தனித்தனியாக கொட்டி காய வைத்து வருகின்றனர். இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி அருகே ஏராளமான வீடுகள் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதற்கு முன் பெரியார் டெப்போ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது, நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படுகிறது. பொதுமக்கள் கூறும் புகாரின் அடிப்படையில் சாலையோர பகுதிகளில் உள்ள குப்பைகள் உடனடியாக அகற்றப்படும் என்றார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement