அம்ரூத் திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- 11 Feb 2021
- 52
- 02
அம்ரூத் திட்ட பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர், பிப்.11-
வேலூர் மாநகராட்சி பகுதியில் வேலூர் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் - அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.275 கோடி மதிப்பில் நடைபெற்றும் வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகளையும், பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிநீர் வடிகால் வாரிய கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட நீர் பரிசோதனை கூடம் மற்றும் முத்து மண்டபம் அருகிலுள்ள குடிநீர் வடிகால் வாரிய நீர் தேக்க தொட்டிகள் மற்றும் மின் இறைப்பான் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டல பகுதியை 67 மண்டல பகுதிகளாக பிரித்து குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் பகுதிகளுக்கு பிரித்து சீராக குடியிருப்பு பகுதிகளுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் ரூ.275 கோடி மதிப்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், கட்டுமான பணிக 693 கி.மீ நீளம் பகிர்மான குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெறுகிறது.
இடையஞ்சாத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ஓட்டேரி மேல் நிலை நீர்தேக்க தொட்டி, முத்து மண்டபம் டோபி கானா பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய நீர்தேக்க தொட்டி மற்றும் மின் இறைப்பான் அறைகளின் செல்பாடுகள் மற்றும் மாவட்ட நீர் பரிசோதனை கூடத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காந்தி நகர் மேற்கு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், அழகிரி நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்கப்பணிகள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணி விரைவில் துவங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சங்கரன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியளார் ராம்சேகர், உதவி செயற்பொறியாளர் நித்யாணந்தம், பொறியாளர்கள் (மாநகராட்சி) சீனிவாசன், உதயகுமார், குமரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment