Logo

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா!

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா!

பூவிருந்தவல்லிபிப்.10-

திருவள்ளூர் மாவட்டத்தில் போகலாமா கைபேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டு வருகிறதுஅதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட அரசு போக்குவரத்து துறை சார்பில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் நடைபெற்றதுதிருவள்ளூர் மணவாளநகர் தனியார் திருமண மண்டபத்தில் வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்இந்த சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் ஓட்டுநர்களுக்கு எந்தெந்த வழிகளில் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வு காட்சிகள்  திரையிடப்பட்டது.

மேலும் கைபேசி பயன்படுத்திக்கொண்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் கவனக்குறைவுமது அருந்துவதால் மனிதருக்கு சிறு மூளையில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கவனச்சிதறல் குறித்து படக்காட்சிகள் வாயிலாக விளக்கப்பட்டனமேலும் படக்காட்சிகள் வாயிலாக விபத்துக்கள் ஏற்படுவதை விளக்கமாக விளக்கிய போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வத்துக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement