Logo

மேலும் இரண்டு மரபணு மாற்ற வைரஸ்கள் கண்டுபிடிப்பு

மேலும் இரண்டு மரபணு

மாற்ற வைரஸ்கள் கண்டுபிடிப்பு

 

லண்டன், பிப்.12-

பிரிட்டனில் கொரோனா தொற்று இதுவரை கட்டுக்குள் வராத நிலையில், மேலும் இரண்டு மரபணு மாற்ற வைரசுகள் அடையாளம் காணப்பட்டிருப்பது சுகாதார அதிகாரிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பிரிஸ்டல் மற்றும் லிவர்பூலில் இந்த இரண்டு மரபணு மாற்ற கொரோனா வைரசுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லிவர்பூர் மரபணு மாற்ற வைரஸ் மூலம் 55 தொற்றுகளும், பிரிஸ்டல் வைரஸ் மூலம் 14 தொற்றுகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வைரசுகளில் ணி484ரி எனப்படும் தென்னாப்பிரிக்க வைரசின் மரபியல் கூறுகள் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மரபியல் மாற்ற வைரசுகளை இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, பிரிட்டனுக்கு வரும் பயணிகள் குவாரண்டைனில் இருக்கும் போது இரண்டு கொரானா சோதனைகளை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரிட்டனின் புதிய ஊரடங்கு விதிகளின் படி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 33 நாடுகளில் உள்ளவர்களுக்கு பிரிட்டனில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கடலுக்கு அடியில் நிலநடுக்கம்

சுனாமி எச்சரிக்கை

 

மெல்போர்ன், பிப்.12-

தெற்கு பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அதனை சுற்றியுள்ள குட்டி தீபுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.7 ஆக ரிக்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாக ஆஸ்திரேலிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பயங்கர நிலநடுக்கம் என்பதால் முன்னெச்

சரிக்கையாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் அலைகள் அதிக அளவில் இருந்ததாகவும், மூன்றரை அடி உயரத்துக்க சுனாமி அலைகள் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட கடல் பகுதியில் சுனாமி அலை எழுந்துள்ளது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் நிலப்பரப்புக்கு பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

மியான்மர் போராட்டத்தில்

துப்பாக்கிச்சூடு..!

 

மியான்மர், பிப்.12-  

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான யாங்கூன், மாண்டலே நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் அரசாணை திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவையும் மீறி, ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் நேபிடாவில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதனைத் தொடர்ந்து ரப்பர் குண்டுகளால் சுட்டனர். அதன் பின்னரும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தப் பெண்ணின் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்ததால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை எனவும், போராட்டக்காரர்களை எச்சரிக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் போலீசாரின் இந்த அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மர் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தன.

 

இங்கிலாந்து இளவரசருக்கு

கொரோனா தடுப்பூசி

லண்டன், பிப்.12-

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.

வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. உலகிலேயே கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல் நாடு இங்கிலாந்துதான். அந்த வகையில் இங்கிலாந்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 94 வயதான இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கும், 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு (வயது 72) கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 73 வயதான அவரது மனைவி கமிலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ள நிலையில் இளவரச தம்பதிக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இளவரசர் சார்லஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்ததும் நினைவுகூறத்தக்கது.

 

பாரம்பரிய முறையில் டை

அணிந்து வந்த துணை தலைவர்

 

நியூசிலாந்து, பிப்.12-

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் கழுத்துக்கு டை அணிவது கட்டாயமில்லை என சபாநாயகர் தெரிவித்து உள்ளார்.

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் டை அணியாமல் வந்ததற்காக மவோரி கட்சியின் துணை தலைவர் ராவிரி வெய்ட்டிக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து பாராளுமன்றத்தில் டை அணிவது கட்டாயம் என்று சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த நிலையில் அண்மையில் பாராளுமன்றம் மீண்டும் கூடிய நிலையில் வெய்ட்டி தனது மலைவாழ் பாரம்பரிய பட்டை முறை டை அணிந்தும், முகத்தில் டாட்டோ வரைந்தும் அவைக்குள் நுழைந்தார்.

இதைக் கண்டு அரண்டு போன நியூசிலாந்து சபாநாயகர் இனி பாராளுமன்றத்தில் டை அணிவது கட்டாயமில்லை என்று பின்வாங்கினார்.

 

மியான்மருக்கான நிதி உதவி

நிறுத்தி வைப்பு-ஜோ பைடன்

 

வாஷிங்டன், பிப்.12-

மியான்மருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ராணுவத் தலைமைக்கு நிதி உதவியை நிறுத்தி வைப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.ஆயினும் சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு உதவும் திட்டங்களுக்கு நிதியுதவி தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை சிறையில் அடைத்தது. அமெரிக்காவில் மியான்மருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா முடக்கியுள்ளது.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்காவிட்டால், புதிய தடைகளை விதிக்க நேரிடும் என மியான்மர் ராணுவத்திற்கு பைடன் எச்சரிக்கை விடுத்தார்.

 

14-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள்

வீட்டில் இருந்தே பணிபுரியலாம்-!

 

சார்ஜா, பிப்.12-  

சார்ஜாவில் அரசுத்துறை ஊழியர்கள் வருகிற 14-ம் தேதி முதல் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சார்ஜா அரசின் மனிதவளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் ஏற்கனவே அரசுத்துறை ஊழியர்கள் வாரந்தோறும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகளில் இருந்து கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒவ்வொரு துறையின் தலைவர்களும் தங்களது தேவைக்கேற்ப முடிவுகளை அறிவிக்கலாம்.

குறிப்பாக அலுவலகங்களில் இருந்து கண்டிப்பாக வேலை செய்ய தேவைப்படுபவர்கள் தவிர மற்றவர்கள் வருகிற 14-ம் தேதி முதல் வீடுகளில் இருந்தே தங்களது வேலைகளை செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ரிமோட் முறையில் வேலை செய்ய இயலாது என்றால்ஷிப்ட் முறையில் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். 2 ஊழியர்களுக்கு இடையே 2 மீட்டர் சமூக இடைவெளியானது கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் முக கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

சார்ஜா போலீஸ் துறையின் தலைமை அலுவலகத்துக்கு வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பிசிஆர் பரிசோதனைகளை செய்து கொரோனா இல்லை என்ற சான்றினை வைத்திருக்க வேண்டும். இத்தகைய சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

இந்த பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்துக்குள் செய்ததாக இருக்க வேண்டும். எனினும் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ரோபோக்கள் நடத்தும்

தேநீர் விடுதி..!

 

துபாய், பிப்.12-

துபாயில் ரோபாக்களால் நடத்தப்படும் தேநீர் விடுதியை காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

துபாயில் உள்ள ரோபோ கபே எனப்படும் தேநீர் விடுதியில் முற்றிலும் ரோபோக்களே பானங்களை தயார் செய்து விநியோகம் செய்து வருகிறது.

தொடுதிரை மூலம் வாடிக்கையாளர் தரும் கட்டளைகளை அச்சு பிசுங்காமல் ரோபோக்கள் செய்து அசத்துகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாயில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போதைய ரோபோ கபே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளதாக உரிமையாளர் தெரிவித்து உள்ளார். இதையடுத்து, துபாயில் ரோபாக்களால் நடத்தப்படும் தேநீர் விடுதியை காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement