Logo

திருவள்ளுர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு-ஆட்சியர் பா.பொன்னையா

திருவள்ளுர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு-ஆட்சியர் பா.பொன்னையா

 

திருவள்ளுர், பிப்.12-

திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான  விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 17.02.2021 பிற்பகல் 05.00 மணி  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.பொன்னையா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள 145 கிராம உதவியாளர் பணியிடங்கள் Special Time Scales of pay Matrix Level 6 (Minimum Rs.11,100 - Maximum Rs.35,100)   என்ற அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பத்திட கடைசி தேதி 17.02.2021. மனுதாரர் விண்ணப்பிக்க வயது வரம்பு 01.07.2020 அன்று மனுதாரர் 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் 30 வயதினையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்ச வயது 35. மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் / வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்த பட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரப்பெறும் விண்ணப்பகளை பரிசீலனை செய்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலமாக மனுதாரர் தேர்வு செய்யப்படுவார். மேலும், ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வாளர்கள் சம மதிப்பெண் பெற நேரும் பட்சத்தில் வயதிற்கேற்ப மூத்த தேர்வாளர்களை தேர்வு செய்யப்படுவர். வருவாய் கிராமங்களுக்கு இன சுழற்சி அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.  விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் / நேரடியாக 17.02.2021 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா,  அவர்கள் தெரிவிக்கிறார்.

திருவள்ளுர் -20, ஊத்துக்கோட்டை-28, ஆவடி - 06, பூவிருந்தவல்லி - 17, திருத்தணி - 14, பள்ளிப்பட்டு -1, ஆர்.கே.பேட்டை - 05, பொன்னேரி - 27 மற்றும் கும்மிடிப்பூண்டி - 27 என மொத்தம் 145 கிராம உதவியாளர் பணியிடங்களை இன சுழற்சி முறையில் வருவாய் வட்டம் வாரியாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும், தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement