முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் 13ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
- 12 Feb 2021
- 29
- 02
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில்
13ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்
சென்னை, பிப்.12-
வரும் 13ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும். சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என தெரிகிறது.
இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் வந்த தேர்தல் ஆணையக் குழுவிடம் தேர்தல் வாக்குப்பதிவை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதே போல 80 வயது மேற்பட்டவர்கள் தபால் வாக்களிக்க அதிமுக ஆதரவு அளித்துள்ளது.
இந்தநிலையில் வரும் 13ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் வரும் 13ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment