Logo

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்- மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு


 

சென்னை, பிப்.14-

 

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணிவரை பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இதையொட்டி, இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதன்மூலம், விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.


Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement