Logo

தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வேலை! - பிரதமர் மோடி அரசை சாடிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

வேலூர், பிப்.15-

சென்னை விமான நிலையங்களுக்கு காமராஜர் அண்ணா ஆகியோர் பெயர்கள் மாற்றப்பட்டால் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் மத்திய அரசு புயல் நிவாரண நிதி வழங்கியுள்ளது காலதாமதம். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வேலை என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.


 

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயநல்லூர் விருதம்பட்டு நடுமோட்டூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்கள் கிராம சபை கூட்டம் மாநகர விவசாய அணி அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் பகுதி செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச்செயலாளர் துரை முருகன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகமது சகி, முன்னாள் அமைச்சரும் தலைமைக் கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் டாக்டர் வி.எஸ்.விஜய், மாவட்ட பொருளாளர் நரசிம்மன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய துரைமுருகன், 

மத்திய அரசு இன்று தான் புயல் நிவாரணம் ஒதுக்கியுள்ளது காலதாமதமானது. திருமணத்திற்கு மொய் வைக்க சொன்னால் குழந்தை பிறந்த பின்னர் மொய் வைக்கிறார்கள். புயல் பாதித்த போது உயிர்கள் சேதம் உடைமைகள் சேதம் என தவித்த போது தவித்த வாய்க்கு தண்ணீரை தராமல் அப்போது ஒதுக்காத நிதியை தற்போது ஒதுக்குவது என்பது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் வேலை.

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென அங்கு மாயனூர் அனையை முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்த போது அடிக்கல் நாட்டி 175 கோடியில் அப்போது நாங்கள் அணையை கட்டினோம். தற்போது மாயனூர் அணையை அங்கு மீண்டும் கட்டுவதாக அடிக்கல் நாட்டுகிறார்கள். ஏற்கனவே நாங்கள் அணையை கட்டியுள்ளோம் என இப்போதாவது அ.தி.மு.க அரசு ஒத்துகொள்கிறது.

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு உள்ள காமராஜ் அண்ணா பெயரை நீக்கினால் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் என எடுப்போம். மத்திய அரசிடம் நிதி கேட்டு மாநில அரசு நிதி பெற முதல்வருக்கு தைரியம் வேண்டும். இந்த முதல்வருக்கு தைரியமில்லை. இவர்கள் மத்திய அரசுக்கு ஆண்டான் அடிமையாக இருக்கிறார்கள். தமிழகரசு அறிவித்துள்ள தடையில்லா மின்சாரம் என்பதை தேர்தல் முடிந்தவுடன் நிறுத்திவிடுவார்கள். தமிழக அரசு வழங்கும் இலவச மின்சாரம் யூனிட் உயர்த்த வேண்டுமென கோரியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் அதையெல்லாம் சேர்த்து அறிவிப்போம். திருவள்ளூவர் பல்கலைக்கழகம் மாபியா கும்பலிடம் உள்ளது. அங்கு ஒரு பெண் துணை வேந்தர் இருக்கிறார். அதனை அவர் சொந்த சொத்து போல் பாவிக்கிறார். அங்கு என்ன நடக்கிறது என சட்டமன்ற உறுப்பினரான எனக்கே தெரியாது. ஐஐடியில் இட ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் களைவோம் என்று கூறினார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement