பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்!
பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல்!
வேலூர், பிப்.17-
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டீ கப்புகள் வேலூரில் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின் பேரில், வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையில், பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் சுண்ணாம்புகார தெருவில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு செய்யப்பட்டது.
ஒரு கடையில் மட்டும் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டீ கப்புகள் என சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அக்கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனையால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
அ.ம.மு.க. பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!
திருப்பத்தூர், பிப்.17-
திருப்பத்தூரில் அ.ம.மு.க., மாவட்ட மாணவரணி செயலாளர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் கௌதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வானவராயன் (30). இவர் திருப்பத்தூர் மாவட்ட அ.ம.மு.க., மாணவரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் கட்சிப்பணியுடன் தனியாக பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்._இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வானவராயன்வீட்டில் இருந்து பைனான்ஸ் வசூலுக்கு சென்றார். வசூல் முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பூங்காவனத்தம்மன் கோவில் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வானவராயனை வழிமடக்கி அரிவாளால் வெட்ட முயன்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி நடுரோட்டில் வெட்டிச் சாய்த்தனர்._
இதில் ரத்த வெள்ளத்தில் வானவராயன் துடிதுடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன்பின் அந்த 4 பேரும் சின்னக்கடை வீதி வழியாக தப்பியோடி விட்டனர்._பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அப்பகுதியில் மர்ம கும்பல் சினிமா பாணியில் அரிவாளால் ஓட, ஓட விரட்டியதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். யாரும் அந்த மர்ம கும்பலை தடுக்கவே இல்லை, வேடிக்கை மட்டுமே பார்த்தனர்._இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை குற்றவாளிகளை பிடிக்க திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வானவராயன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு வானவராயனை ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த கும்பலே தற்போது கொலை செய்து இருக்கலாமா? அல்லது வேறு காரணம் எதுவும் இருக்குமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்._திருப்பத்தூரில் சினிமா பாணியில் அ.ம.மு.க., பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave A Comment