Logo

மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பரப்புரை தேதி மாற்றம்

சென்னை, மார்ச் 5-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின், 6ஆம் கட்ட பிரச்சார சுற்றுப்பயண தேதி மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


 

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில், வருகிற 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 9 மணிக்கு சேலம் சீலநாயக்கன்பட்டியிலும், பகல் 1 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியிலும், மாலை 5 மணிக்கு கரூர் ராயனூரிலும், மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த நாள் 13ஆம் தேதி சனிக்கிழமை, காலை 9 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலும், பகல் 12 மணிக்கு மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியிலும், மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபடுவார் என திமுக அறிவித்துள்ளது. 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement