Logo

வலுவிழந்ததா மநீம 3வது கூட்டணி..?

சென்னை, மார்ச் 8-

திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்ததால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நீர் பூத்த பூவாய் ஆனாது.. திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில், தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று எதிர்பார்த்த கமலுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அழைப்பு விடுத்து  மநீம... ஏமாற்றம் அடைந்துள்ளது...  இதனால் 3வது கூட்டணி....  வலுவிழந்ததா... என்ற பேச்சு தொடர ஆரம்பித்துள்ளது... 

 

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் மநீம-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்தும் அந்த கட்சிகள் திமுக நிழலிலேயே இருக்க முடிவு செய்து, ஒப்பந்தமும் போட்டுவிட்டன.

தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் கடந்த சில தினங்களாக இழுபறி ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு தேர்தலில் 63 இடங்களையும், 2016-ம் ஆண்டு தேர்தலில் 41 இடங்களையும் தி.மு.க.விடம் இருந்து காங்கிரஸ் பெற்று இருந்தது. 

ஆனால் இந்த தடவை காங்கிரஸ் கட்சிக்கு 20-25 இடங்களே தர முடியும் என்றதால் இழுபறி உருவானது. காங்கிரஸ் தரப்பில் 30 முதல் 35 தொகுதிகள் வரை எதிர்பார்த்தனர். ஆனால் தி.மு.க. தலைவர்கள் அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்ததால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு கட்சி தலைவர்களும் திரை மறைவு பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.  அதிலும் சுமூக தீர்வு காண முடியவில்லை.  

காங்கிரஸ் தலைவர்கள் இதுதொடர்பாக சென்னை சத்திய மூர்த்திபவனில் கூடி ஆலோசித்தனர். அப்போது பெரும்பாலானவர்கள் காங்கிரசுக்கு தி.மு.க.விடம் இருந்து கவுரவமான தொகுதிகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். 

திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை விட மிக குறைவான தொகுதிகளை கொடுக்க திமுக முன்வந்ததால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். 

இதையடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அப்போது 30 தொகுதிகள் வரை தந்தால் திமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்று சிலர் கூறி உள்ளனர். சிலர் தனித்து போட்டியிடலாம் என்றும், சிலர் கமல் கட்சியுடன்  கூட்டணி அமைக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர் என்று தகவல் உலாவந்தன. 

காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த கருத்து, தி.மு.க.வின் முடிவு ஆகிய விபரங்களுடன் வீரப்ப மொய்லி டெல்லி விரைந்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்து, தமிழக நிலவரம் பற்றி எடுத்து சொல்வார். ராகுலின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகள் நிலவி வந்தன. 

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரசுக்கு கமல் ஹாசனின் மக்கள் நிதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வந்தால், அவர்களுக்கு நல்லது என ம.நீ.ம. பொதுச்செயலாளர் குமரவேல் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமையிலான மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான  தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.  

திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது.

 

இந்த சிக்கலுக்கு தீர்வு காண நேற்று   முன்தினம் இரவு மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு செய்தார். காங்கிரஸ் தலைவர்களுக்கு உடனடியாக அழைப்பு விடுத்தார். அதை ஏற்று நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள் மு.க.ஸ்டாலினுடன் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மு.க.ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசினார். சுமார் 20 நிமிடம் அவர்கள் இருவரும் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தனர். அப்போது தி.மு.க., காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடலாம் என்றும் இரு கட்சி தலைவர்களும் தீர்மானித்தனர். இந்த தகவல்களை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று முன்தினம் இரவு நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் நேற்று காலை கையெழுத்திட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவும் தி.மு.க. ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக நிலவி வந்த தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது.

திமுக குறைவான தொகுதிகளை கொடுப்பதில் பிடிவாதமாக இருந்து, காங்கிரஸ் வெளியேறும் சூழ்நிலை வந்தால், மூன்றாவது அணி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் ஏகத்துக்கும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. இதுற்கெல்லாம் சலைத்தவர் அல்ல திமுக தலைவர் ஸ்டாலின் என நிரூபனம் ஆகியுள்ளது... 

அதே போன்று காங்கிரஸ் கட்சியினரும், கூடுதலான தொகுதிக்காக  கூட்டணி  தாவுகிறவர்கள் நாங்கள் அல்ல என மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையிலான நம்பிக்கையை பலப்படுத்தி நிரூபித்து உள்ளனர்.

‘காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு நல்லது’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்த மக்கள் நீதி மய்யம் ஏமாற்றத்தை தழுவிவுள்ளது.. 

அதேபோல், விசிக தங்களுடன் கூட்டு சேர வேண்டும் என்றும் கமல்ஹாசன் எதிர்பார்த்திருந்தார். ஆனால், அந்த எண்ணத்திலும் மண் விழா, ‘என் தம்பி திருமாவளவன்’ அடுத்த தேர்தலில் என்னிடம் தான் வர வேண்டும் என்று மறைமுகமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை நாம் பார்க்க முடிந்தது. இதனால் 3வது கூட்டணி....  வலுவிழந்தாத... என்ற பேச்சு தொடர ஆரம்பித்துள்ளது... 

வயது மூப்பு காரணமாக, இந்த 2021 தேர்தலிலேயே எப்படியாவது தனது பலத்தை நிரூபித்துவிட வேண்டும் என்று தேர்தல் களமாடும் கமல்ஹாசனின் விசிக, காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய டார்கெட்டும் கை நழுவ, கடும் அப்செட்டில் உள்ளாராம் ஆழ்வார்பேட்டை நம்மவர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. இந்த கூட்டணி ஏறக்குறைய ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டுவிட்டதாக மநீம கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன் முதன் முதலில் கூட்டணி சேர ஆர்வமாக முன்வந்தவர் சரத்குமார் தான். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரின் சமகவும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐஜேகே கட்சியினரும் இணைந்து கமல்ஹாசனை சந்தித்தனர்.

இந்நிலையில், நேற்று கமல் தனது ட்விட்டரில், “மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்” என்று ட்வீட் பதிவிட்டார்.  

இதற்கு, கமல் யாரை நாய் என்கிறார்? யாரை நரி என்கிறார்? என்று மாற்றுக் கட்சியினர் அவரது டீவீட் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், கமலின் அந்த டிவீட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கமல்ஹாசனை 2015ம் ஆண்டு சரத்குமார் பொளந்து கட்டிய வீடியோ ஒன்றை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அதில், சரத்குமார், “பிரச்சனை-னு வந்தா ஊரை விட்டு ஓடிப் போறேன்னு சொல்றவன்லாம் மனுஷனா?.. வீரன்-னா நின்னு சமாளிக்கணும்... இப்படி ஓடிப்போறேன்னு சொல்லக் கூடாது’ என்று சரத்குமார் பேசிய வீடியோக்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இதனால், பெரும் சங்கடத்தில் இருப்பது ராதிகா சரத்குமார் தானாம். ஏனெனில், கூட்டணி பேச்சுவார்த்தையில் ராதிகாவுக்கு துணை முதல்வர் பதவி கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காலமே அனைத்திற்குமான விடை.... மாற்றம் ஒன்றே மாறாதது... எதுவும், எப்போதும், என்ன  வேண்டுமானாலும் நடக்கலாம்...  ஜெயிக்க போவது யார் என்று காலச்சக்கரம் சுழற்சியில் காலச்சக்கரம் கண்ணாடி காட்டும்... காத்திருப்போம்... 

 

Tweet

Conversation

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement