திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு
- 08 Mar 2021
- 88
- 02
சென்னை, மார்ச் 8-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12ம் தேதி தொடங்க இருக்கின்றது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.
திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான தொகுதி பங்கீட்டில் கடந்த ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அடங்கிய குழு இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்த பேச்சுவார்த்தை நடத்தியது.
அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று காலை 10.30 மணி அளவில் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.
இந்த பேச்சு வார்த்தையின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் அ.சௌந்தரராஜன், பி.சம்பத் பங்கேற்றனர்.
திமுகழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, எம்.எல்.ஏ., கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment